tamilnadu

img

நெஞ்சில் சுடாமல் முதுகில் குத்திவிட்டார்கள்... ‘370’ நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு!

ஸ்ரீநகர்:
காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளைவழங்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப் பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீநகரில் தனதுவீட்டின் முன்பாக அளித்த பேட்டியில்பரூக் அப்துல்லா மேலும் கூறியிருப்பதாவது:

பிராந்தியங்களைப் பிரிப்பதன் மூலம் முஸ்லிம்களை ஒரு பக்கமும், இந்துக்களை ஒரு பக்கமும், புத்த மதத்தவர்களை ஒரு பக்கமும் வைக்க முயற்சிக்கிறார்கள். இது அல்ல இந்தியா. எனது இந்தியா அனைவருக்குமானது. மதச்சார்பற்றது. 
அனைத்து விதங்களிலும் உடல் ஒருங்கிணைந்து இருக்கும்போது தான்எந்த தீயசக்தியையும் எதிர்த்து போராடமுடியும். உடல் வெட்டப்படுவதாக ஒருவர் உணரும்போது அவரால் எப்படி சிந்திக்க முடியும்?மத்திய பாஜக ஆட்சியாளர்கள் எங்களைக் கொலை செய்ய நினைக்கிறார்கள். நாங்கள் தயார், எனது மார்புதயார், இங்கே சுடுங்கள். தயவு செய்துமுதுகில் குத்தாதீர்கள்.370 சட்டப்பிரிவு ரத்து ஏன் செய்யப்பட்டது? அதற்கு என்ன தேவை ஏற் பட்டது? 370-வது சட்டம் குடியரசுத் தலைவரின் உத்தரவு அல்ல. அரசியல் சாசனம். இந்த செயல் அரசியல் சாசனப்படிநடைபெற்றது என்றால், உச்சநீதிமன் றத்தில் வழக்கு முடியும் வரை உள்துறைஅமைச்சர் ஏன் காத்திருக்கவில்லை?கதவுகள் விரைவில் திறக்கும். எங் கள் மக்கள் வெளியே வருவார்கள், நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். நாங்கள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்வோம்.இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

;